அண்ணாசாலையில் பதற்றம்…! பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து...!
Tension on Anna Salai Sudden fire breaks out BSNL office
சென்னை அண்ணாசாலையின் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து, அந்தப் பகுதியையே பரபரப்பில் ஆழ்த்தியது.
அலுவலக கட்டிடத்தின் 2-ம் தளத்திலிருந்து 4-ம் தளம் வரை மளமளவென தீ பரவியதால், புகைமூட்டம் சூழ்ந்து ஊழியர்களும் பொதுமக்களும் அலறியடித்து வெளியேறினர்.
இந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், பல வாகனங்களுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
இந்த திடீர் தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tension on Anna Salai Sudden fire breaks out BSNL office