அப்பா படத்தை ஓரம் போகச் சொல்லிடலாமா?விஜய் மகன் தான் இனி டாக் ஆப் தி டவுன்– டீசர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகுவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்றும், தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரைப் போல இயக்குநராக வருவதில்தான் அதிக ஈர்ப்பு இருப்பதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுப்பதற்காக முறையான சினிமா கல்வியை பயின்ற ஜேசன் சஞ்சய், தற்போது தனது முதல் படமான ‘சிக்மா’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

விஜயின் கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக காலடி எடுத்து வைத்த லைகா நிறுவனம், விஜயுடன் உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை தயாரிக்க முன்வந்தது. அதன்படி, லைகா தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்க, நடிகர் சந்தீப் கிஷான் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் சிக்மா.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகவும், படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக இயக்குநராக களமிறங்கியுள்ள ஜேசன் சஞ்சயின் இந்த முயற்சி, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் சூழலில், அதற்கு முன்பே ஜேசன் சஞ்சயின் சிக்மா டீசர் வெளியாக இருப்பது கவனம் பெற்றுள்ளது. இதனால், தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் அப்பா விஜய் – மகன் ஜேசன் சஞ்சய் குறித்தே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

சில இணையவாசிகள், “என்னப்பா… ஜனநாயகனை ஓரம் போகச் சொல்லிவிடலாமா?” என கிண்டலாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அதே நேரத்தில், சிக்மா படத்தின் டீசர், விஜயின் படம் திரையிடப்படும் திரையரங்குகளிலும் ஒளிபரப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

மொத்தத்தில், நடிகராக அல்லாமல் இயக்குநராக அடையாளம் பதிக்க முனைந்துள்ள ஜேசன் சஞ்சயின் முதல் படமான சிக்மா, தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை இயக்குநர் அறிமுகமாகும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Can we ask the father to put the film aside Vijay son is now the talk of the town Teaser release date officially announced


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->