இன்சூரன்ஸ் பணத்துக்காக கட்டுவிரியன் பாம்பை ஆயுதமாக மாற்றிய மகன்கள்...!
Sons turn krait snake into weapon insurance money
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் (56) அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி காலை, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்ததாக தெரிவித்து, அவரது மகன் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் ஆரம்பத்தில் இயற்கை விபத்து என கருதப்பட்ட இந்த மரணம், விசாரணை முன்னேறியபோது மர்மமாக மாறியது. ஆனால், குடும்பத்தினர் கூறிய தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததால், இந்த மரணத்தில் சந்தேகம் எழுந்த

இதனைத் தொடர்ந்து, இன்சூரன்ஸ் நிறுவனம் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது.மேலும், போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கணேசன் பெயரில் பல உயர்மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசிகள் இருந்தது தெரியவந்தது.
அந்த இன்சூரன்ஸ் தொகையை கைப்பற்றுவதற்காக, அவரது மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர், மணவூரை சேர்ந்த பாலாஜி (28), பிரசாந்த் (35), நவீன் குமார் (28) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (28) ஆகியோருடன் சேர்ந்து கொடூர சதியை திட்டமிட்டுள்ளனர்.
சதி திட்டத்தின் உச்சமாக, தந்தை ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, கட்டுவிரியன் பாம்பை கொண்டு கழுத்தில் கடிக்கவைத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
இந்த மனிதாபிமானமற்ற குற்றம் உறுதியானதை அடுத்து, மோகன்ராஜ், ஹரிஹரன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.‘இன்சூரன்ஸ்’ என்ற பெயரில் ‘உயிர்’ விலைபேசப்பட்ட இந்த சம்பவம், பெற்றோர்–மகன் உறவையே கேள்விக்குறியாக மாற்றி, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sons turn krait snake into weapon insurance money