இந்திய ஹாக்கி வீரர் மீது ''போக்சோ'' வழக்கு பதிவு: பின்னணியில் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையத்தில் இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது பெண்ணை காதலிப்பதாக தெரிவித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து வருடங்களாக பழகி வந்த நிலையில் திருமணம் செய்யாமல் மோசடி செய்ததாக இளம் பெண் புகார் அளித்துள்ளார். 

2022 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற இந்திய அணிலும் அருண்குமார் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில்  கடந்த 2021 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்ற வருண்குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வதற்காக பஞ்சாப், ஜலந்தர் விரைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian hockey player against POCSO case 


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->