உலக சாதனையுடன் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்! தட்டி தூக்கிய சிஃப்ட் சம்ரா! - Seithipunal
Seithipunal


19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கியது முதல் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில் தற்போது 59 தங்கப்பதக்கம் உட்பட 105 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. 

இந்தியா 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் பதக்கங்களுடன் 7ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் 50 மீட்டர் ரைப்பில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிஃப்ட் சம்ரா 469.6 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கத்தையும் தட்டி தூக்கி உள்ளார். இதே பிரிவில் இடம்பெற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான ஆஷி சோக்சி 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இதுவரை இந்தியா துப்பாக்கி சுடுதலில் மூன்று தங்கம், குதிரை ஏற்றும் மற்றும் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தலா ஒரு தங்கம் என மொத்தம் 5 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India won gold medal in 50m rifle shooting in Asian Games


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->