#INDvsAUS : கோலி, சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம்.. இந்திய அணி அசத்தல் வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிடம் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதது. இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

அதன்படி, 3வது டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு 7:00 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கிரீன் 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

அவரைத்தொடர்ந்து பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் சுமித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா அணியை டிம் டேவிட் சரிவில் இருந்து மீட்டார். அவரின் அரைசதத்தின் 54 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. 

அதனைத் தொடர்ந்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மாவும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்ததாக விராட் கோலியுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்களை குவித்ததால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்தநிலையில் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். 
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 37 பந்துகளில் தனது அரைசதம் அடித்தார். இந்த நிலையில் இந்தியா வெற்றிபெற கடைசி ஒவரில் 11 ரன்கள் தேவைப்பட்டநிலையில் விராட் கோலி முதல் பந்தில் சிக்சர் அடித்தநிலையில், (47 பந்துகளில் 63 ரன்கள்) அடுத்த பந்தில் கேட்ச் ஆகி அவுட்டானார்.

இதனையடுத்து 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹார்திக் பாண்டியா பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 1 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 25 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இறுதியாக இந்திய அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India won by 6 wickets in 3rd T20


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->