பாகிஸ்தானை வெல்ல இந்தியா இதை செய்ய வேண்டும்-கபில்தேவ் அட்வைஸ்!
India should do this to beat Pakistan Kapil Dev advice
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி தனது தொடக்கப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடியாக தொடக்கம் கண்டது. அதேசமயம், பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமன் அணியுடன் மோதுகிறது.
இதையடுத்து, பரம எதிரிகளாகக் கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மறுதினம் துபாயில் மோதவுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தார் ராணுவ நடவடிக்கைக்கு பின், இவ்விரு அணிகள் மோதும் முதல் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:“இந்திய வீரர்கள் ஆட்டத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நமது அணி மிகச் சிறந்த திறமை வாய்ந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். வெளியிலிருந்து வரும் பிற விஷயங்களால் கவனச் சிதறல் ஏற்படாமல், தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே முக்கியம். களம் இறங்கி வெற்றியைப் பெறுங்கள். அரசாங்கம் தன்னுடைய வேலையைப் பார்த்துக்கொள்ளும்; வீரர்கள் தங்களது கடமையைச் சரியாக செய்ய வேண்டும். அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நன்றாக ஆடியது. இந்தக் கோப்பையையும் நமது அணி வெல்லும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்தியா–பாகிஸ்தான் மோதலுக்கான கவுண்டவுன் துவங்கியுள்ள நிலையில், இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா சூழலை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
India should do this to beat Pakistan Kapil Dev advice