அனல் பறந்த அரையிறுதி பேட்மிண்டன் ஆட்டம்! கடும் போராட்டத்திற்கு பின் இந்தியா அபார வெற்றி!  - Seithipunal
Seithipunal


ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பேட்மிட்டன்  அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியானது தென்கொரியா அணியை எதிர்கொண்டு விளையாடியது. மிகவும் சவாலான இந்த ஆட்டத்தில் இந்தியாவும் தென்கொரியாவும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

இந்தியா ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும், லக்ஷயா சென் , 21 - 7 , 21 - 9, பிரணாய் 18 - 21 , 21 - 16 , 21 - 19 என்ற செட் கணக்கிலும், இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் இந்தியாவின் சிராஜ் - சாத்விக் இணையும், அர்ஜுன் - துருவ் இணையும், தோல்வியடைந்ததால் தென்கோரிய அணி வெற்றி பெற்று, ஆட்டம் இரண்டுக்கு இரண்டு என்ற சமநிலை வகித்தது. 

இப்போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை முடிவு செய்யும் இறுதி ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தென்கொரிய வீரரை எதிர் கொண்டு விளையாடினார். இதில் முதல் செட்டை 12 - 21 என கிடாம்பி ஸ்ரீகாந்த் இழந்துவிட்ட நிலையில், இரண்டாவது செட் ஆட்டத்தில் 21 - 16 என வெற்றி பெற்றார். மூன்றாவது செட்டை இவர் வெற்றி பெற்று அணியை இறுதி போட்டிக்கு அழைத்து செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில் ஏமாற்றம் அளிக்காமல், 21 - 14 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். 

உலகத் தரவரிசையில் 163 வது இடத்தில் இருக்கும் வீரரை எதிர்கொள்வதால் ஸ்ரீகாந்த் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீகாந்துக்கு கடுமையான சவால் கொடுத்து விளையாடினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா முதன்முறையாக அணிபிரிவில் தங்கப்பதக்கத்திற்கு விளையாட உள்ளது. இறுதிப்போட்டியில் சைனாவை சந்திக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India advance into FINAL of Men's Team event for the 1st TIME EVER at Asian Games


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->