பரபரப்புடன் முதல் ஆட்டத்தை வெற்றி பெற்ற இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 42 பந்துகளில் 70 ரன்களை எடுத்தார். சாப்மேன் 50 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் புவனேஷ் குமார் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீபக் சாஹர், முகமது சிராஜ்  ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினார். கேஎல் ராகுல் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்தே ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

ரோகித்சர்மா 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூரியகுமார் யாதவ் 40 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி வெற்றி ஏப்ர  கடைசி 4 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட் மற்றும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து. 

இதையடுத்து, 3 ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை பெர்குசன் வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து. அதனால் கடைசி இரண்டு ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இறுதிகட்டத்தில் ஆட்டம் பரபரப்பானது. 19வது ஓவரை சவுத்தி வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 

இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. அடுத்த பந்தை வெங்கடேஷ் அய்யர் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 5 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தில் வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழந்தார். இதனால் 4 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் அக்சார் பட்டேல் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs nz t20 match india win


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->