இந்தியாவுக்கு எதிரான பலம்வாய்ந்த அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


இந்திய-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணி, கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தற்போது இங்கிலாந்திலேயே தங்கி உள்ளது.

அதே சமயத்தில், ஷிகர் தவான் தலைமையிலான ஒரு இந்திய அணி இலங்கை அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரை ஆட உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியாவுடனான முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான பலம்வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று மாலை 17 பேர் கொண்ட தனது அணியை அறிவித்துள்ளது. அதில், சாம் கரன், ஆலி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். 

இங்கிலாந்து அணி விவரம்:

ஜோ ரூட் (கேப்டன்)
ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஸ்டுவர்ட் பிராட்
ரோரி பர்ன்ஸ்
ஜோஸ் பட்லர்
ஜானி பேர்ஸ்டோவ்
டாம் பெஸ்
ஸாக் கிராலே
சாம் கரன்
ஜேக் லீச்
ஆலி போப்
ஆலி ராபின்சன்
டாம் சிப்லே
பென் ஸ்டோக்ஸ்
மார்க் வுட்
ஹசீப் ஹமீத்
டேன் லாரன்ஸ்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs eng test match eng team


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal