#BigBreaking: ஆஸி.,யின் 32 வருட சாதனையை முறியடித்து, மண்ணை கவ்வவைத்த இந்தியா..! மாபெரும் வெற்றி.! - Seithipunal
Seithipunal


இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு டெஸ்ட் தொடரில் 4-வது ஆட்டம் பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.  ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 369 ரன்கள் சேர்த்து. இந்த ஆட்டத்தில் இந்திய தரப்பில் அறிமுகம் ஆன தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்களை எடுத்து அசத்தினர். ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 336 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 33 ரன்கள் பின் தங்கியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 67 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் எடுத்து அசத்தினர். 

இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 294 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து, 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் அடித்து தொடரை கைப்பற்றியது. மேலும், இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு தொடர் கோப்பைகளை கைப்பற்றியதன் மூலமாக, இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.  

இந்த போட்டியில், ஹில் 146 பந்துகளில் 91 ரன்களும், புஜாரா 211 பந்துகளில் 56 ரன்களும், ரிஷப் பண்ட் 134 பந்துகளில் 80 ரன்களும் அதிகபட்சமாக எடுத்துள்ளனர். இன்றைய காபா கிரிக்கெட் மைதானத்தில், கடந்த 32 வருடமாக ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்ததே கிடையாது என்ற பெருமையை தக்க வைத்திருந்த நிலையில், இந்திய அணியின் அபார ஆட்டத்தால், ஆஸ்திரேலியாவின் பெருமை இந்தியாவால் தட்டி செல்லப்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ind Vs Aus Match 4 th Test Match India Victory 19 Jan 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->