விதிகளை மாற்றும் ஐசிசி : தலைவர் பதவிக்கு போட்டியிடும் கங்குலி..! - Seithipunal
Seithipunal


தற்பொழுது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக கிரெக் பார்க்லே இருந்து வருகிறார், அவரின் பதவிக்காலம் இந்த வருடம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

இந்நிலையில், பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி, ஐசிசி-யின் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி தலைவராகுவதற்கு  மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை இல்லை என்றும் 51 சதவீத வாக்குகள் பெற்றாலே போதும் என்றும் புதிய விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று பல உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் தற்போது பிசிசிஐ செயலாளராக பதவி வகிக்கும் ஜெய் ஷா தலைவராக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், விதிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc new leader competition and change rules


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->