கூப்பர் கானலியின் போராட்டம் வீண்; பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஹைதராபாத் ..! - Seithipunal
Seithipunal


19வது ஐபிஎல் தொடரின் 49வது போட்டி இன்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஐதராபாத் அணி  33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

முதலில் இந்த போட்டியில் டாஸ் வெற்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 04 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் என அபார இலக்கை அடைந்தது. 

அணி சார்பில், அபிஷேக் சர்மா (35), டிராவிஸ் ஹெட் (38), இஷான் கிஷன் (55), கிளாசன் (69), நிதிஷ் குமார் ரெட்டி (29) என சிறப்பாக ஆடினர். பஞ்சாப் அணி சார்பில், அர்ஸ்தீப் சிங், பெர்குசன், சஹால், வைஷாக் விஜயகுமார் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

அடுத்து 236 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர். இதில் சூர்யன் செட்கே 25, ஸ்டோனிஸ் 28 என ஓரளவு தாக்கு பிடித்தனர். அடுத்து வந்தது முதல் நிதானமாக ஆடிய கூப்பர் காணொலி ஆட்டமிழக்காமல் 107 ரன்களை கடந்தார். 

இறுதியில் பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 07 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 02-அம்ம இடத்திற்கு இறங்கியுள்ளது. 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hyderabad Defeats Punjab by 33 Runs


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->