இந்திய அணியை ஊக்கப்படுத்திய, ஹர்திக் பாண்டியாவின் சிறுவயது புகைப்படம்.. குவியும் பாராட்டு.!! - Seithipunal
Seithipunal


உலக கோப்பையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகின்ற மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்திய அணி நேற்று முதல் பயிற்சியை தொடங்கியது. இந்த உலக கோப்பை போட்டியை மாற்றும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கும் ஆல்ரவுண்டர்கள் என்ற அதிக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருப்பவர் ஹர்திக் பாண்டியா. இவர் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார், இவர் எதிரணிக்கு நிச்சயம் சவாலாக இருப்பார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் 2011ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, 2011ல் உலக கோப்பை இந்திய அணியை ஊக்கப்படுத்தினேன். 

2019 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்துள்ளேன். கனவு நினைவாகியுள்ளது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் ஹர்திக் பாண்டியாக்கு  பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

English Summary

hardik pandya instagram photo


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal