கூட்டத்தில் கொரோனா பரவியதால் ஐபிஎல் நிறுத்தப்படுகிறாதா? கௌதம் கம்பீர் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

வருகிற 19ம் தேதி முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது. அனைத்து அணிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதனால் இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் ஒரே ஒருவருக்காக  தொடரை கைவிட முடியாது என்று பாஜக எம்பியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்தபோது கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவை கண்டு அச்சமடைய  மாட்டார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். அவசியம் கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் முறையாக பின்பற்றி நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gowtham gambeer strictly said ipl will not stop


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->