10 ஓவர்கள் பந்துவீச முடியுமா? ; 'ஆல்ரவுண்டர்' ஹர்திக் பாண்டியாவை ஓரங்கட்ட நினைக்கும் கெளதம் கம்பீர்..!
Gautam Gambhir plans to sideline Hardik Pandya
இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த ஆல்ரவுண்டர்களில் முதன்மையானவர் ஹர்திக் பாண்டியா. அவரை அணியில் இருந்து தூக்கிவிட்டு, அவர் இடத்தில் நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா போன்ற தனக்கு ஜால்ரா போடுவோரை கம்பீர் பெரிதும் பரிந்துரைக்கிறதாகவும், அவர்களுக்காக வாதாடுகிறார், தொடர்ந்து அவர்களுக்காக பேசுகிறார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அண்மையில் ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்விக்குப் கம்பீர் அளித்த பதில் இது குறித்து பேச வைத்துள்ளது. அதாவது, ''அவர் இன்னமும் 10 ஓவர்கள் வீசும் பவுலராக இல்லையே'' என்ற தொனியில் பேசியுள்ளார். ஏன் இவரைத் தேர்வு செய்யவில்லை என்ற கேள்விக்கு, அதற்கு அணித் தேர்வுக்குழுவிடம் கேளுங்கள் என்று கடுமையாக கூறிய கம்பீருக்கு எதிராக விமர்சனங்கள் எழுகின்றன.

ஐபிஎல் 2026-க்குப் பிறகு இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கவுள்ளார். இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளுக்குத் திரும்புவதற்கு முன்பு அவருக்கு போதிய ஆட்டப் பயிற்சி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அத்துடன், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டி20 அணியில் இடம்பெற்றிருந்த நிதிஷ் ரெட்டி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 06 விக்கெட்டுகளை வீழ்த்திய ரெட்டி, இரு அணிகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகத் தொடரை முடித்துள்ளார்.
இது குறித்து கெளதம் கம்பீர் கூறுகையில், ''நிதிஷ் டி20 அணியில் இருந்து விலக்கப்பட்டு, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது அவருக்கு மிகவும் நல்ல விஷயம் என்றும், இன்னும் ஓர் ஆண்டில் தென்னாப்பிரிக்கா செல்லும்போது, வேகப்பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர்கள் மிகவும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். ஹர்திக் திரும்பியதும், சூழ்நிலையைப் பொறுத்து இருவரையும் ஒரே ஆடும் லெவனில் கூட களமிறக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியில், ஹர்திக், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த ஆண்டில் பல்வேறு காயங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய அணியின் திட்டமிடலில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், சிறந்த வீரர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். மறுபுறம் ஷுப்மன் கில் போன்ற இளம் கேப்டனுக்கும், சிறந்த வீரர்களைக் கொண்ட அணியைத் தொடர்ந்து பெறுவது முக்கியம். ஒரு பயிற்சியாளராக விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், ஷுப்மன் சிறந்த ஆடும் லெவனை வழிநடத்துவது அவசியம் என்று கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Gautam Gambhir plans to sideline Hardik Pandya