'தல தோனி'யை மிரள வைத்த ரசிகரால் பரபரப்பு! சென்னை சேப்பாக்கத்தில் சலசலப்பு!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சி மேற்கொண்ட போதும் அவரது ரசிகர் ஒருவர் டோனியின் காலில் விழுந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வருகின்ற 29ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி திட்டமிட்டபடி ரசிகர்கள் முன்னிலையில் போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இதனால் சிஎஸ்கே அணி வீரர்கள் மைதானத்தில் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சியை மேற் கொண்டிருந்தனர். அப்போது மைதானத்தில் சிஎஸ்கே அணியின் தலைவர் தோனியும் பயிற்சியில் இருந்தார். அப்போது தோனி ரசிகர் ஒருவர் இரும்பு வேலியை தாண்டி தோனியை நோக்கி வேகமாக வந்துள்ளார்.

வந்த வேகத்தில் கீழே விழுந்த அவர் அதே வேகத்தில் டோனியின் கால்களை இறுக பிடித்துக்கொண்டார். இதனால் மிரண்டு போன தோனி சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் ரசிகரை தடுத்து மைதானத்தில் இருந்து வெளியே அனுப்பினார். பின்னர் மீண்டும் பயிற்சியை தொடங்கினார் தோனி. இந்த பரபரப்பால் தற்போது மைதானத்தில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fan met dhoni during practice time


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal