ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..!!
England squad announced for Ashes series
இங்கிலாந்து அணி தற்பொழுது அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஸ் தொடரை எதிர் கொள்ள உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஆஷஸிஸ் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 பேர் கொண்ட அணியை முதல் இரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுக்கும் இங்கிலாந்து தக்க வைத்தாலும் சிறிய மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜோஷ் டங்கு, லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஒல்லி ராபின்சன் ஆகியோருடன் அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். முதல் டெஸ்ட் போட்டிக்கு தகுதியுடையவர் என்று எதிர்பார்க்கப்படும் ஆண்டர்சன் மற்றும் பிராட் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் வேகப்பந்து வீச்சில் இங்கிலாந்து அணி வலுப்பெற்றுள்ளது.
மார்க் வுட், மேத்யூ பாட்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து பாதியில் வெளியேறிய பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சுக்கான உடற்தகுதி பெறவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஸ்டோக்ஸ் உடல் தகுதியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதால் பந்து வீசுவார் என தெரிவித்திருந்தார்.
அயர்லாந்து டெஸ்டுடன் 9 மாதங்களுக்குப் பிறகு அதிரடியாக அணிக்கு திரும்பிய பேர்ஸ்டோவ் கீப்பிங்கில் விக்கெட்டுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஒல்லி போப், ஜானி பேர்ஸ்டோவ் (விக்), ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் லீச், பென் டக்கெட், ஜாக் க்ராலி, மேத்யூ பாட்ஸ், ஆலி ராபின்சன், டான் லாரன்ஸ், கிறிஸ் வோக்ஸ் , மார்க் வூட், ஜோஷ் டங்க் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
English Summary
England squad announced for Ashes series