5-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் முக்கிய வீரர்கள் விலகல்..!
England captain Ben Stokes and key players withdraw from the 5th Test match
இங்கிலாந்து எதிரான 05 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. 04 வது போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 02-01 என்று இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும்05-வதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 31 வியாழக்கிழமை) லண்டனில் உள்ள ஓவலில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இருந்து வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். மேலும் அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும் அணியில் இடம்பெறவில்லை. குறித்த 05 வது டெஸ்ட் போட்டிக்கு அணியின் கேப்டனாக ஓல்லி போப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். இந்நிலையில், கடைசி டெஸ்டில் இருந்து விலகியுள்ளமை இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் தனது அபாரமான ஆட்டத்தால் பென் ஸ்டோக்ஸ், போட்டியின் நாயகன் விருதையும் வென்றார். ஸ்டோக்ஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 35 ஓவர்கள் பந்து வீசியதால், அப்போது அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டோக்ஸ்க், வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன் ஆகியோரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை. மேலும், ஜேக்கப் பெத்தேல் அணியில் சேர்க்கப்பட்டு 06-வது இடத்தில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாளை தொடங்கவுள்ள 05-வது போட்டிக்கான இங்கிலாந்து அணி விபரம்:
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.
English Summary
England captain Ben Stokes and key players withdraw from the 5th Test match