தமிழகத்தின் கிரிக்கெட் திருவிழா; டிஎன்பிஎல் தொடரின் 10-வது சீசனின் முதல் போட்டியில் திண்டுக்கல் - திருப்பூர் அணிகள் மோதல்..!
Dindigul and Tiruppur teams clash in the first match of the 10th season of the TNPL series
டிஎன்பிஎல் தொடரின் 10-வது சீசன் இன்று (04-ஆம் தேதி) தொடங்கி வரும் வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
டிஎன்சிஏ சார்பில் நடத்தப்படும் இந்த தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சர்க்கிள்பேஸ் மதுரை பேந்தர்ஸ், கோவை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் ஆகிய 08 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடர் இம்முறை 02 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்ட போட்டி இன்று முதல் வரும் 15-ஆ ம் தேதி வரை திண்டுக்கல்லிலும், 02-வது கட்ட போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன. முதல் லீக் சுற்று போட்டிகள் இன்று முதல் வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

தொடரில் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டம் 23-ஆம் தேதியும், எலிமினேட்டர் ஆட்டம் 24-ஆம் தேதியும், 02-வது தகுதி சுற்று ஆட்டம் 26-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
இந்த டிஎன்பிஎல் 10-வது சீசனில் சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 28-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இம்முறை 22 டபுள் ஹெட்டர்ஸ் (ஒரே நாளில் 02 ஆட்டங்கள்) நடைபெறுகின்றன. அதன்படி, மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
தொடக்க நாளான இன்று இரவு 07.30 மணிக்கு திண்டுக்கலில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 சேனல் நேரலை செய்கிறது. அத்துடன், டிஎன்பிஎல் யூடியூப் சேனலிலும் போட்டிகளை எனக்கு கண்டுகளிக்கலாம்.
English Summary
Dindigul and Tiruppur teams clash in the first match of the 10th season of the TNPL series