குட்டி தோனி வருகிறாரா? கிரிக்கெட் ரசிகர்களுக்கு போனஸாக கிடைத்த நல்ல செய்தி! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், தற்போது ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். நேற்று முடிவடைந்த ஐபிஎல் தொடரில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. 

கோப்பையை கைப்பற்றியதையடுத்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வரும் வேளையில், தோனி குடும்பத்தில் இருந்து அடுத்த நல்ல செய்தியையும் வந்திருக்கிறது. தோனி சக்ஷி தம்பதியினருக்கு ஸிவா என்ற பெண் குழந்தை ஆறு வயதில் இருக்கும் நிலையில், டோணியின் மனைவி சாக்ஷி மீண்டும் கர்ப்பம் தரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டித் தொடரின்போது தோனி - சாக்‌ஷி தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்த போது, உலக கோப்பை தொடரை முடித்துவிட்டு வந்து முதல் குழந்தையைத் தூக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்பொழுது ஐபிஎல் மேட்ச் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தோனியின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி அவரது குடும்பத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக செய்திகளை வெளியிடாத நிலையில், செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. தோனிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni's wife sakshi pregnant


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal