தவானுக்கு மாற்று வீரர்! இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்!  - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணிக்கு அதிர்ச்சியாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கடந்த ஆஸ்திரேலிய போட்டியின் போது, அடைந்த காயம் பெரிய காயமாக இருப்பதாகவும், அவர் அணியிலிருந்து விலகியதாகவும், இன்று மதியம் முதல் தகவல்கள் வெளியாகின. 

அவர் அணியிலிருந்து வெளியானதாக தகவல் வெளியானதும், அவருக்கு பதிலாக யாரை மாற்று வீரராக களம் இருக்கலாம் என்பது வரை விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர், அம்பத்தி ராயுடு இவர்களில் ஒருவரை கிளம்பலாம களமிறக்கலாம் என ஒவ்வொருவரும் ஒரு கருத்தை தெரிவித்து வந்த நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. 

ஷிகர் தவான் தொடர்ந்து இங்கிலாந்தில் இருப்பார் எனவும், தொடர்ந்து அணியுடன் நீடிப்பார் எனவும், அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்று வீரர்களை தேர்வு செய்யும் எண்ணம் தற்போது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஷிகர் தவான் ஓரிரு போட்டிகளில் விளையாடாமல் போகலாம் ஆனால் தொடரில் இருந்து விலகவில்லை என்பது தெரிய வருகிறது. 

English Summary

Dhawan is presently under the observation of the BCCI medical team announced by BCCI


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal