கொல்கத்தா அணிக்கு திடீர் சறுக்கல்! முன்னணி வீரர்கள் விலகல்! டெல்லி அணியுடன் மோதல்!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டி ஆட்டம் டையில் முடிய சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக டெல்லி அணியை சந்திக்கும் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அந்த அணியின் முன்னணி வீரர் சுனில் நரைன்,  க்றிஸ் லின், குரனே ஆகியோர் காயம் மற்றும் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. 

அவர்களுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் கார்லஸ் ப்ரத்வாய்ட், ஜோ டென்லி, லோக்கி பெர்குசன்  ஆகியோர் அணியில் இணைக்கபட்டுள்ளனர். டெல்லியைப் பொறுத்தவரையில் லாமிசேன்னே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கீமா பால் சேர்க்கப்பட்டுள்ளார்.  டெல்லி  அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 

லின், நரேன் என அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் கொல்கத்தா அணியின் இன்றைய ஆட்டத்தில் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
 
டெல்லி கேபிடல்ஸ் (Playing XI): ப்ரித்வி  ஷா, ஷிகர்  தவான், ஷ்ரேயஸ்  ஐயர் (c), ரிஷப்  பந்த் (w), கொலின் இக்ராம் , கிறிஸ்  மோரிஸ் , அக்சார் படேல், ராகுல்  தேவாதியா, கீமோ  பால், காகிஸோ ரபாடா, இஷாந்த்  சர்மா, 

கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் (Playing XI): ஜோ  டென்லி , ராபின்  உத்தப்பா , நிதிஷ்  ராணா , தினேஷ்  கார்த்திக் (w/c), சுபமன் கில், ஆண்ட்ரே  ரசல், கார்லோஸ்  ப்ரதிவாய்ட்டே, பியூஸ்  சாவ்லா , குலதீப்  யாதவ் , லொக்கியே  பெர்குசன் , ப்ரதிஷ்  கிருஷ்ணா 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi won the toss elected to bowl first against kkr


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal