காமன்வெல்த் கிரிக்கெட் போட்டி : இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகிறது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. 

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CWG Womens T20 Cricket India vs Pakistan today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->