யார்க்கர் கிங் என்று அழைக்கப்படுபவர்... விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சூரன்... யார் இவர்? - Seithipunal
Seithipunal


தமிழக கிரிக்கெட் வீரர்...

சேலத்தை பூர்வீகமாக கொண்டவர்...

இடது கை வேகப்பந்து வீச்சாளர்...

தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல... இந்திய ரசிகர்களை, ஏன்? உலக கிரிக்கெட் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர்...

பல தடைகளை வென்று சாதனைப் படைத்தவர்...

'யார்க்கர் கிங்" என்று அழைக்கப்படுபவர்...

விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சூரன்...

ஐபிஎல் தொடக்கம் முதலே பலரின் கவனத்தையும் ஈர்த்தவர்...

யார் என கண்டுபிடித்து விட்டீர்களா?

தங்கராசு நடராஜன்:

பிறப்பு : 

தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரந்து கிடக்கும் வயல்வெளி பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் தான் தங்கராசு நடராஜன். இவர் 1991ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பிறந்தார்.

நடராஜன் சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பள்ளியில் படிப்பு நேரம் போக மீதி நேரம் மைதானத்தில் விளையாடுவதிலேயே செலவழித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார்.

குடும்பம் :

நடராஜன் தமிழகத்தின் சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தங்கராஜ் ஒரு நெசவுத் தொழிலாளி, தாய் சாந்தா சாலையோரக் கோழிக் கடை நடத்துபவர். இவரின் உடன்பிறந்தவர்கள் 3 சகோதரிகள், ஒரு சகோதரர் ஆவார்.

2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடராஜன் பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹன்விகா என்ற பெண் குழந்தை உள்ளது.

சாதனைகள்:

ஐ.பி.எல் 2020ஆம் ஆண்டு தனது விக்கெட் எடுக்கும் திறன் மற்றும் மிகச்சிறந்த யார்க்கர்களுடன் ஒருவர் அனைவரையும் திகைக்க வைக்கும்போது எல்லோராலும் அறியப்பட்டவர் தான் நடராஜன்.

ஆஸ்திரேலியா தொடரில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமான ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தவர் நடராஜன்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இவர் தான்.

டி20 போட்டிக்கான இந்திய அணியில் களம் கண்ட நடராஜன், தனது அசாத்திய திறமையாலும், துல்லியமான யார்க்கர் பந்துவீச்சாலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடிக்க செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cricketer Natarajan history in Tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->