டக்கர் தான்! எப்போதும் Thala for A Reason என்று எம்.எஸ் தோனியை புகழ்ந்த முதலமைச்சர்...!
Chief Minister who praised MS Dhoni as always Thala for A Reason
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC ),சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை 'ஹால் ஆப் பேம்' ( ALL OF FAME )என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது.அவ்வகையில் ICC , அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சேர்கப்பட்டுள்ளார்.இதில் இந்திய வீரர்களான கபில்தேவ், ராகுல் டிராவிட், பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கும்ப்ளே உள்ளிட்டோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளார்கள்.இந்நிலையில், எம்.எஸ்.தோனி 11-வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டது பெருமையாக இருக்கிறது.
இந்த சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் எம் எஸ் தோனிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின்:
இதுதொடர்பாக அவர் தெரிவித்தது,"Hall of Fame-இடம்பெற்ற தோனிக்கு வாழ்த்துகள். அதிகமுறை ஒருநாள் அணியை வழிநடத்தியது தொடங்கி, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், அதிக ஸ்டப்பிங் செய்த கீப்பர், சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டன் என ஒரு சரித்திரத்தை உருவாக்கியுள்ளார்.
அமைதியால் தலைமைப் பண்புக்கே புது வடிவம் கொடுத்தவர். விக்கெட் கீப்பிங்கை கலையாக மாற்றியவர். எப்போதும் Thala For A Reason என்றே போற்றப்படுவீர்கள்"என்று பாராட்டியுள்ளார்.
English Summary
Chief Minister who praised MS Dhoni as always Thala for A Reason