“இவ்வளவு முட்டாள்தனமாக பந்து வீசுவாயா?” – 2019 ஐபிஎலில் தன்னைக் திட்டிய தோனியின் ரகசியத்தை சொன்ன தீபக் சஹர்!
Can you bowl so stupidly Deepak Chahar reveals the secret behind Dhoni scolding of him in the 2019 IPL
இந்தியாவின் முன்னாள் கேப்டனும், மூன்று வகை ஐசிசி வெள்ளைப்பந்து உலக கோப்பைகளை வென்ற ஒரே தலைவருமான எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடரிலும் சென்னைக்கு ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ‘கூல் கேப்டன்’ என அழைக்கப்படும் அவர் அமைதியின் உச்சம் எனப் பாராட்டப்பட்டாலும், சில தருணங்களில் அவர் கூட கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அப்படியான ஒரு சம்பவம் 2019 ஐபிஎல் தொடரின் போது நடந்தது. டெத் ஓவரில் தொடர்ந்து இரண்டு நோ-பால் வீசிய தீபக் சஹரை தன்னருகே அழைத்து தோனி திட்டிய சம்பவத்தை, சஹர் தற்போது பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் தன் தங்கை மால்தியிடம் பகிர்ந்து கொண்டார்.
அதை விவரித்த சஹர் கூறியதாவது:“அந்த சீசனில் நான் முதல் முறையாக டெத் ஓவரில் பந்து வீசினேன். மஹி பாய் என்மீது நம்பிக்கை வைத்து அந்த பொறுப்பை கொடுத்தார். ஆனால் முதல் பந்து கால் நழுவியதால் ஃபுல்டாஸாகி நோ-பாலானது. சர்பராஸ் கான் அதை பவுண்டரியாக அடித்தார். மீண்டும் மெதுவான பந்து முயன்றும் மறுபடியும் நோ-பாலாக மாறியது.”
தொடர்ந்து, அந்த நேரத்தில் தோனி உச்சக்கட்ட கோபத்தில் தன்னிடம் வந்து,“உன்னை நம்பித்தானே இந்த ஓவரை கொடுத்தேன்… அதற்காக இவ்வளவு முட்டாள்தனமாக பந்து வீசுவாயா?”என்று கடுமையாக பேசினார் என்று சஹர் தெரிவித்தார்.
தன்னால் தவறு செய்துவிட்டதாக நினைத்து மனம் தளர்ந்த சஹர், அடுத்த 5 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இறுதியில் அந்த ஓவரும், போட்டியும் சிஎஸ்கேக்கு சாதகமாக மாறியது.
தோனி திட்டியது தான் தன்னை ஒருசேர கோபமூட்டியும், ஊக்கமளித்தும் வெற்றி பெறச் செய்ததாக சஹர் உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.
தோனியின் கேப்டன்சி, நேரடி விமர்சனமும் நம்பிக்கையும் சேர்ந்து எப்படி வீரர்களை உயர்த்துகிறது என்பதை காட்டும் சம்பவமாக இது ரசிகர்களிடம் மீண்டும் வைரலாகி வருகிறது.
English Summary
Can you bowl so stupidly Deepak Chahar reveals the secret behind Dhoni scolding of him in the 2019 IPL