புரோ கபடி லீக் - பெங்களூரு புல்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதல்..! - Seithipunal
Seithipunal


பதினொன்றாவது புரோ கபடி லீக் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். 

தற்போது இந்தத் தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. நேற்று யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் 48-39 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பெங்களூரு புல்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், இரவு 9 மணிக்கு தபாங் டெல்லி- புனேரி பால்டன் அணியும் மோதுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bengaluru bulls and jaipur pink panthers team clash today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->