சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை - அதிர்ச்சியில் திருநங்கைகள்.!
ban on trans genders not participate in international competition
சர்வதேச மகளிர் விளையாட்டு போட்டியின் கண்ணியத்தை பாதுகாப்பதற்கும், வீராங்கனைகளின் பாதுகாப்பிற்காகவும் சர்வதேச போட்டிகளில் திருநங்கைகள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் பங்குதாரர்களின் ஒன்பது மாத நீண்ட ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவு குறித்து ஐசிசியின் வட்டாரத்தில் கூறுகையில், ''2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின்போது கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதை முன்னிட்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும் பட்சத்தில் ஒலிம்பிக் விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக பாலின விவகாரமானது உலக அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது ஒலிம்பிக்கிற்கு ஏற்றவாறு விதிமுறைகளை மாற்றியமைத்து, அந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. ஆகவே, அதற்கேற்பதான் திருநங்கைகளுக்கு தடைவிதிக்கும் முடிவை ஐசிசி எடுத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டில் முதல் திருநங்கை வீராங்கனையாக களமிறங்கி சாதனை படைத்த கனடாவின் டேனியல் மெக்கே தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
ban on trans genders not participate in international competition