ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி! அடேங்கப்பா... இவ்வளவு சாதனைகளா?! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை இறுதி போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சால், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி 8 வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் கலைமிரங்கி பேட்டிங் செய்தது. 15.2 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்மூலம் இந்திய அணி 8 வது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த ஆட்டத்தின் மூலம் ஒருநாள் தொடரில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 

குறைந்த ஓவர்களில் ஆட்டமிழந்த அணிகளில் இலங்கை அணி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. நான்காவது இடத்திலும் இலங்கை அணியே உள்ளது. கடந்த 2002 பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 16.5 ஓவர்களில் இலங்கை அணி ஆட்டமிழந்து இருந்தது.

முதல் இடத்திலும், மூன்றாவது இடத்திலும் ஜிம்பாப்வே அணியே உள்ளது. 
2017 ஆப்கானிஸ்தானுக்கு எதிராக - 13.5 ஓவர்களில்
ஜிம்பாப்வே, 2001 இலங்கைக்கு எதிராக - 15.4 ஓவர்களில்

ஒருநாள் போட்டிகளில் இலங்கையின் குறைந்தபட்ச ஸ்கோர் பட்டியல் :

43  ரன்கள், 2012 - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக
50 ரன்கள், 2023 - இந்தியாவுக்கு எதிராக
55 ரன்கள், 1986 - மே.இ.தீவுகளுக்கு எதிராக
67 ரன்கள், 2014 - இங்கிலாந்துக்கு எதிராக 
73 ரன்கள், 2023 - இந்தியாவுக்கு எதிராக 

ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணிகள் பட்டியல் :

இலங்கை (2023) - 50 ரன்கள் (இந்தியாவுக்கு எதிராக)
இந்தியா (2000) - 54 ரன்கள் (இலங்கைக்கு எதிராக)
இலங்கை (2002) - 78 ரன்கள் (பாகிஸ்தானுக்கு எதிராக)
ஓமன் (2019) - 81 ரன்கள் (நமீபியாவுக்கு எதிராக)

ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் வேகப்  பந்துவீச்சாளர்கள் எடுத்த பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி இடம்பிடித்துள்ளது.

ஒருநாள் ஆட்டங்களில் இந்திய பந்து வீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சு பட்டியல் :

ஸ்டுவர்ட் பின்னி - 6 விக்கெட்டுகள் (4 ரன்கள்), 2014 - vs வங்கதேசத்துக்கு 
அனில் கும்ப்ளே - 6 விக்கெட்டுகள் (12 ரன்கள்), 1993 - vs மே.இ.தீவுகளுக்கு 
ஜஸ்பிரித் பும்ரா - 6 விக்கெட்டுகள் (19 ரன்கள்), 2022 - vs இங்கிலாந்துக்கு 
முகமது சிராஜ் - 6 விக்கெட்டுகள் (21 ரன்கள்), 2023 - vs இலங்கைக்கு

ஒருநாள் ஆட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ரன்கள் எடுத்த அணிகள் 

இலங்கை (2023) - 50 ரன்கள்
வங்கதேசம் (2014) - 58  ரன்கள் 
ஜிம்பாப்வே (2005) - 65 ரன்கள்
இலங்கை (2023) - 73 ரன்கள்

ஒருநாள் ஆட்டங்களில் குறைந்த பந்துகளில் முடிந்த ஆட்டங்கள் :

நேபாளம்-அமெரிக்கா (2020) - 104 பந்துகள் 
இலங்கை - ஜிம்பாப்வே (2001) - 120 பந்துகள்
இந்தியா - இலங்கை (2023) - 129 பந்துகள்
இலங்கை - கனடா (2003) - 140 பந்துகள்

ஒருநாள் தொடர்களின் இறுதி ஆட்டத்தில் பிரமாண்ட வெற்றியில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 

263 பந்துகள் மீதம் - இந்தியா - இலங்கை (2023) 
226 பந்துகள் மீதம் - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (2003) 
179  பந்துகள் மீதம் - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் (1999) 

ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் பிரமாண்ட வெற்றி பட்டியல் : 

263 பந்துகள் மீதம் - இந்தியா - இலங்கை (2023) 
231 பந்துகள் மீதம் - இந்தியா - கென்யா (2001)
211 பந்துகள் மீதம் - இந்தியா - மே.இ.தீவுகள் (2018) 
188 பந்துகள் மீதம் - இந்தியா - இங்கிலாந்து (2022) 

ஒருநாள் தொடர்களின் இறுதி ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியல்:

இந்தியா - இலங்கை (2023) - இந்தியா வெற்றி - இலக்கு 51 ரன்கள் 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (2003) - ஆஸ்திரேலியா வெற்றி - இலக்கு 118 ரன்கள் 
இந்தியா - ஜிம்பாப்வே (1998) - இந்தியா வெற்றி - இலக்கு 197 ரன்கள் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AsianCup2023 INDvsSL new Records


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->