ஆசிய விளையாட்டு: 5வது நாள் வேட்டையிலும் தங்கத்தை தட்டி தூக்கிய இந்தியா!
Asian Games India won gold 5th day
சீனா ஹாங்சோவ் நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
5வது நாளாக இன்று நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை இந்தியா 4 தங்கம் 5 வெள்ளி 7 வெண்கலம் என மொத்தமாக 16 பதக்கங்களை வென்றுள்ளது.

சாம்ரா, ஆஷி சௌக்ஷி மற்றும் மனினி கௌசிக் 3 பேரும் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
இந்திய மகளிர் அணியினர், 25 மீட்டர் பிஸ்டல் ரேபிட் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய 3 பேரும் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளனர். மேலும் இந்த பிரிவில் 3 பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
English Summary
Asian Games India won gold 5th day