"நீ வாடா., அங்க வாடா" வரும் முன்னாள் அஸ்வினிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட டிம் பெயின்.! - Seithipunal
Seithipunal


இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 3 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் அடுத்த நடக்க உள்ள ஆட்டம் இரு நாட்டு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் -விஹாரி விக்கெடை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விரக்தியின் உச்சிக்கே சென்றனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அஸ்வினிடம் வார்த்தைப் போர் நடத்தி அவரை திசைதிருப்பும் முயற்சி செய்தார்.

ஆனால் 'கர்மா ரிட்டர்ன்'., அந்த வார்த்தை போரில் அஸ்வின் வெற்றி பெற. டிம் பெயின் தோல்வியடைந்து, ஒரு முக்கியக் கேட்சை விட்டதுதான் மிச்சம். டிம் பெயின்-க்கு இதனால் சொந்த அணி வீரர்களின் விமர்சனத்துக்கே ஆளாக்கினார்.

 

அஸ்வினும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் உரையாடலின்போது, 

டிம் பெயின்: அடுத்த டெஸ்ட் போட்டிக்கு உனக்காக காத்திருக்கிறேன். உங்களை அங்கு பார்த்துக்கொள்கிறேன்.

அஸ்வின்: நீ இந்தியாவா பார்ப்போம் அதுதான் உனது கடைசி தொடராக உனக்கு இருக்கும்

டிம் பெயின்: நான் ஏன் அங்கு வருகிறேன்.

டிம் பெயின்: நீங்கள் சாதித்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

அஸ்வின்: (தொடர்ந்து கேப்டன் பேசிக் கொண்டே இருப்பதால் தன்னால் ஆட முடியவில்லை என்று நடுவரிடம் புகார் அளித்தார்)

அடுத்த சில நிமிடங்களில் விஹாரி கொடுத்த கேட்சை கோட்டை விட்டார் டிம் பெயின். இது அவர் விரக்தியின் உச்சியில் இருந்ததை எடுத்து உரைத்தது. அனைத்து விக்கெட்டையும் எடுத்த நம்மால் அஸ்வின் - விஹாரி விக்கெட்டை எடுக்க முடியாத விரக்தியில் இருந்த அணியின் ஒவ்வொரு வீரர்களும் வெறுத்து போய் நின்ற காட்சி ஒரு சமயத்தில் பரிதாபத்தை ஏற்பட்டாலும், இது உங்களுக்கு தேவையான ஒன்றுதான் என்று உலக கிரிக்கெட் ரசிகர்களை சொல்லுமளவுக்கு தான் அமைந்தது. தலைக்கனம் உள்ளவள் தலைகுனிவதை பார்க்க வலிக்குமா என்ன உலகுக்கு.

இந்நிலையில், ஆடுகளத்தில் சீண்டியதற்காக அஸ்வினிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு பேட்டியளித்துள்ளார் டிம் பெயின். அவரின் பேட்டியில், "நான் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் என்னுடைய அணியை நல்ல முறையில் வழி நடத்த விரும்பினேன். ஆனால் நேற்று கேப்டன் பதவியில் நான் சரியாக செயல்படவில்லை.

நெருக்கடி காரணமாக நான் தவறாக நடந்து கொண்டேன். மேலும் நான் என்னுடைய தரத்தை குறைவாக நடந்து கொண்டேன். நேற்றைய ஆட்டம் எங்களின் அணி மீதான மதிப்பை குறைத்து விட்டது. ஆட்டம் முடிந்த பின்பு அஸ்வினுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டேன். நான் ஒரு முட்டாள் போல் எனக்கு நானே காட்சி அளித்தேன். அவரிடம் அடிக்கடி பேசினேன். அதனால்தான் விஹாரி கேட்சை விட்டுவிட்டேன். என்று என் தவறுக்காக அவரிடம் நான் மன்னிப்பு கேட்டேன். பின்னர் நாங்கள் சிரித்துக் கொண்டோம். அதன் பின் எல்லாம் சரியாகிவிட்டது. அடுத்த டெஸ்ட் ஆட்டத்திற்காக காத்திருக்கிறோம்." என்று டிம் பெயின் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ கிரிக்கட் 'ஜென்டில்மேன் கேம்'., அதனாபா., அதேதான்பா.,
(அடுத்த ஆட்டத்துல ஆஸ்., என்ன திருட்டு தனம் பண்ண போறாங்கன்னு அவுங்களுக்கு மட்டுமே தெரியும்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ashwin tim paine


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal