தோனி அரசியலில் களமிறங்க வேண்டும்  - தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன் தோனி 5வது முறையாக கோப்பையை வென்று கொடுத்த நிலையில் ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இதில் தனது ஓய்வு குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, என்னுடைய ஓய்வை அறிவிக்க இது சரியான தருணம் என்றாலும் எல்லா இடங்களில் இருந்தும் எனக்கு அளவு கடந்த அன்பு கிடைத்து வருகிறது.

இத்துடன் நான் எளிதாக கிளம்பி விட முடியாது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால் 6 மாதங்கள் கடினமாக உழைத்து. மேலும் ஒரு ஆண்டு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது தான். அது என்னிடமிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அதே நேரத்தில் என்னுடைய உடல் ஒத்துழைக்கமா என்பதையும் பார்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தோனியின் முடிவு குறித்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறேன்.

மேலும் பாஜகவின் தேசிய துணைத்தலைவர் பைஜெயந்த் ஜெய் பாண்டா தலைமையில் என்‌.சி.சி ஆய்வுக் குழுவில் தோணியுடன் பணியாற்றியதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anand Mahindra request to MS dhoni into politics


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->