இந்தியாவில் 2 உலக கோப்பை தொடர்கள்.. ஐசிசி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஐசிசியின் அடுத்து வரவிருக்கும் நான்கு டி20 உலக கோப்பை, 2 ஒருநாள் உலக கோப்பை மற்றும் இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் நாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2024 முதல் 2031 வரையிலான 8 ஐசிசி கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் 2026-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர், 2029-ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி, 2031-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. 

ஐசிசி வெளியிட்டுள்ள 8 போட்டிகளுக்கான அட்டவணை : 

2024 -ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2025-ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிசிசிஐ தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் கடைசியாக 1996ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற்றது. அதற்குப் பிறகு பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி நடைபெற உள்ளது. 

2026ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

2028-ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற உள்ளது. 2029-ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி இந்தியாவில் நடைபெற உள்ளது. 

2030-ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 2031-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 icc series in india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->