KL ராகுலின் இந்த அதிரடியான ஆட்டத்திற்கு காரணமே இவங்க 2 பேர் தானம்..! வெளியான சுவாரஸ்ய தகவல்..!! - Seithipunal
Seithipunal


டந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் KL ராகுலின் ஆட்டம் மந்தமாக இருந்ததால் டெஸ்ட் அணியின் துவக்க வீரர் இடத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின் தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடனான தொடர்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கான ரன்களை குவிக்க தவறியதால் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கியது.

இதை தொடர்ந்து, கேஎல் ராகுல் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் காரணமாக இந்திய அணியிலிருந்து இருவரையும் தற்காலிகமாக நீக்கி வைத்திருந்தனர். பின்னர் 50 ஓவர் உலகக் கோப்பையில் தவானுக்கு பதிலாக ராகுல் விளையாடினார், அப்போது அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக மீண்டும் ராகுலுக்கு டெஸ்ட் போட்டியிலும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெற்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார்.

மேலும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவரது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். பேட்டிங் மட்டுமில்லாமல் கீப்பிங்கிலும் அவர் சிறப்பாக விளையாடி வந்தார். தற்போது தகவலின்படி இவரது இந்த சிறப்பான ஆட்டத்தினை காரணம் விராட் கோலியும் டீவில்லியர்ஸ் தானம். பல்வேறு வீரர்களிடம் ராகுல் பேசியிருந்தாலும் டிவிலியர்ஸ் மற்றும் கோலி தான் அவருக்கு தேவையான தன்னம்பிக்கையை பெற்று தந்துள்ளனர்.

அதன்படி, பேட்ஸ்மேன்னும், வீக்கெட் கீப்பருமான ஏபி டிவில்லியர்ஸ் ராகுலுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவரின் ஸ்கில்ஸ்களை ராகுலுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அதன்படி விளையாடி சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். மேலும், தற்போது கோலி ராகுல் மீது அதீத நம்பிக்கை வைத்து உள்ளதால் அவருக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 players behind the kl rahul victory


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->