விசேஷ வீடுகளில் வாழைமரம் கட்டுவதற்கு பின் இப்படி ஒரு அறிவியலா.?! தமிழர்களின் கலாச்சார பெருமை.!
Why vazhaimaram Put In marriage house
வீட்டில் சுப காரியங்களுக்கு அடையாளமே வாழைமரம் கட்டுவது தான். பூ, பூத்து காய், காய்த்த தழைத்த வாழை மரத்தை தான் பலரும் தேர்ந்தெடுப்பார்கள். நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள்.
அந்த காலத்தில், திருமண வீடுகளில் மட்டும்தான் வாழைமரம் கட்டப்பட்டது. மனிதனின் வாழ்வு வாழையடி வாழையாக வாழைமரம் போல் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வாழைமரம் கட்டப்படுகிறது. இதற்கு, அறிவியல் ரீதியான காரணங்களும் இருக்கிறது தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடு எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை பரவ செய்கிறது.

வீட்டில் நிறைய கூட்டம் அந்த நிகழ்ச்சி நேரத்தில் வருவதால் அவர்கள் விடும் மூச்சு காற்றில் உள்ள கார்பண்-டை ஆக்சைடு தாவரம் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கிறது. எனவே, தான் வீட்டில் மா, இலை தோரணங்கள், வாழைமரம் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.
இது கிருமிகளை அழிப்பதுடன் உஷ்ணத்தையும் குறைக்கிறது. ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. வாழைமரம் பொதுவாக வாழைக்கு பெண்ணின் குணமும் தெய்வகுணமும் உண்டு.

சிலருக்கு திருமண தோஷங்கள் இருப்பதுண்டு. 2 திருமணம் என்றும் கூட சிலருக்கு ஜாதகத்தில் இருக்கும். அந்த தோஷங்களை நிவர்த்தி செய்ய வாழை மரத்துக்கு தாலி கட்டி சடங்கு செய்வார்கள். இது போல செய்வதால் திருமண பந்தத்தில் எந்த விதமான இடையூறும் இல்லாமல் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
வீட்டில் கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கவும் விசேஷ நாட்களில் வீடுகளில் வாழைமரம் கட்டப்படுகிறது.
English Summary
Why vazhaimaram Put In marriage house