சம்பாதிக்கிற பணம் எல்லாம் எப்படி செலவாகுதுன்னு தெரியலையா.? இந்த பரிகாரத்தை உடனே செய்யுங்க
want to save nore money do this remdy immediately
எல்லோருக்கும் நிறைய பணம் சம்பாதித்து காசு சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் இன்று உலகமிருக்கும் பொருளாதார சூழலில் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் காசு எங்கு வருகிறது எவ்வாறு செலவாகிறது என்றே தெரியாமல் நாம் சம்பாதித்த அத்தனை பணமும் செலவாகி விடுகிறது. நாம் சம்பாதிக்கும் பணம் சேமிப்பில் இருக்கவும் நம் வீட்டில் செல்வம் தங்குவதற்கும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்:
பச்சை நிற துணி - 2
காய்ந்த மருதாணி விதைகள் - 6
ஏலக்காய் - 6
பச்சைக் கற்பூரம் - 6
ஒரு ரூபாய் நாணயம் - 9

பரிகாரம் செய்யும் முறை :
இரண்டு பச்சை துணிகளை எடுத்து அவற்றில் காய்ந்த மருதாணி விதைகள், ஏலக்காய் மற்றும் பச்சைக் கற்பூரம் ஒரு ரூபாய் நாணயங்கள் ஆகியவற்றை வைத்து இரண்டையும் இரண்டு மூட்டைகளாக கட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு மூட்டையை வீட்டின் வாசலிலும் மற்றொரு மூட்டையை வீட்டில் பணம் வைக்கும் இடத்திலும் வைக்க வேண்டும்.
இந்த பரிகாரம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் நேரங்கள்:
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்ய வேண்டும். மேலும் இந்த மூட்டைகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் . வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் பௌர்ணமி நாட்களில் இரவு ஆறு மணி முதல் 11 மணி வரையிலும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
English Summary
want to save nore money do this remdy immediately