கோலாகலமாகத் தொடங்கிய திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் தேரோட்டம்.!!
thirunallr saneeswarar temple chariot start today
கோலாகலமாகத் தொடங்கிய திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் தேரோட்டம்.!!
உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் என்றால் அது காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் தான் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர்.
இந்த நிலையில், இந்த சனீஸ்வரர் கோவிலில் கடந்த 16-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு தினமும் சாமிக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்று விதவிதமான அலங்காரத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்கள்.

இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இன்று காலை தேரோட்டம் ஆரவாரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியுள்ளார்.
இந்தத் தேர் திருவிழாவைக் காண்பதற்காக காரைக்கால், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பக்தி கோஷத்துடன் தேரை இழுத்து வருகின்றனர். இந்தத் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருநள்ளாறு, நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
thirunallr saneeswarar temple chariot start today