பெயர்ச்சியான சுக்கிர பகவான்... காதல் மழையில் நனைய போகின்றவர்கள் யார் யார்? - Seithipunal
Seithipunal


சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்கிறார். அதன்படி பிப்ரவரி 21ஆம் தேதியான நேற்று முன் தினம் சுக்கிரன் மகரம் ராசியிலிருந்து கும்ப ராசியில் பெயர்ச்சியடைந்தார்.

சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். சுக்கிரப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும்? கும்பம் ராசியில் சூரியனுடன் இணையும் சுக்கிரனால் யாருக்கு காதல் மலரும்? என்று பார்க்கலாம்.

மேஷம் : 

சுக்கிரபகவான் 11ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருவது நல்ல அம்சம். லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் தனம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். காதலிப்பவர்களுக்கு இது உற்சாகமான மற்றும் சந்தோஷமான மாதம். 

ரிஷபம் : 

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் அமர்கிறார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளது உங்கள் தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். காதலியுடன் சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்படும்.

மிதுனம் : 

ராசிக்கு 9ஆம் இடமான கும்பத்தில் அமர்கிறார் சுக்கிரன். குடும்பத்திலும், தொழிலிலும் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். 9ஆம் இடத்தில் சுக்கிரன், சூரியனுடன் இணைவதால் ஆன்மிக பயணம் செய்வீர்கள். 

கடகம் : 

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்கிறார் சுக்கிரன். பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தவும். இவர்களுக்கு உடல் நலம் சற்றே பாதிப்படையும்.

சிம்மம் : 

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமர்வதால் வாழ்க்கைத்துணை உடனான காதல் உணர்வுகளை அதிகரிக்கும். சிலருக்கு காதல் பூக்கின்ற காலமும் இதுவாகும்.

கன்னி : 

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைகிறார். உங்கள் உடல் நலனையும், சேமிப்பில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய காலம் இது. புதிய நபர்களின் அறிமுகம் வாழ்க்கையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

துலாம் : 

காதல் நாயகனும், உங்கள் ராசி நாதனுமான சுக்கிரன் துலாம் ராசிக்கு 5ஆம் இடத்தில் அமர்கிறார். இதன் மூலம் காதல் உணர்வுகளும்... காதல் மழையும் பொழியும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்பதால் துலாம் ராசிக்காரர்கள் இந்த மாதத்தை சிக்கலின்றி கடத்தி விடலாம். 

விருச்சிகம் : 

விருச்சிக ராசிக்கு சுக ஸ்தானத்தில் உங்கள் களத்திர ஸ்தான அதிபதி சுக்கிரன் அமருவதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு : 

தனுசு ராசிக்கு 3வது வீடான கும்ப ராசியில் குடியேறுகிறார் சுக்கிரன். இதனால் நட்பு வட்டம் மற்றும் பேச்சுத்திறமை அதிகரிக்கும்.

மகரம் : 

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் சந்தோஷ அலைகள் வீசும் காலமிது. சிலருக்கு புதிய காதல் உண்டாகும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

கும்பம் : 

சுக்கிரன் உங்கள் ராசியில் அமர்கிறார். இவர்களுக்கு ஆபரணச்சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மீனம் : 

உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் சுக்கிரபகவான் அமர்வதால் சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். வியாபாரத்தில் கிடைக்கும் பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். எந்த பிரச்சனை என்றாலும் புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sukrapeyarchi 2021


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal