டிசம்பர் 20ல் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா..!!
Shanipayarchi festival at Tirunallaru Saneeswarar temple on dec20
புதுச்சேரி, காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி விழா வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம்படி, வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது என்றும், அன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக தேதி, நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தற்பொழுது தொடங்கியுள்ளன.
English Summary
Shanipayarchi festival at Tirunallaru Saneeswarar temple on dec20