சனிப்பெயர்ச்சி 2020... ஜனவரி அல்லது டிசம்பர்... எப்போது நடக்கிறது?... - Seithipunal
Seithipunal


ற்போது எல்லோரின் மனதிலும் குழப்பி கொண்டிருக்கும் ஓர் கேள்வி...

சனிப்பெயர்ச்சி எப்போது? சனிப்பெயர்ச்சி 24.01.2020 அன்று இருக்கிறதா? இல்லையா?

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகியும், 24.1.2020க்கு பிறகும் தனுசு ராசியிலேயே சனிபகவான் இருப்பதுபோல் செயலியில் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. அது சரியா?

எல்லா ஜோதிடர்களும் ஜனவரி 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்று எழுதுகிறார்கள். ஆனால் தங்களின் நாட்காட்டியில் டிசம்பர் மாதத்தில் மாறுவதாக உள்ளது.

திருக்கணித பஞ்சாங்கம் :

18ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தொலைநோக்கி உதவியின் மூலம் கிரக நிலைகளையும், சந்திரனது சுழற்சி பாதையில் ஏற்படும் சிறு சிறு வித்தியாசத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்பட்ட பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கமாகும்.

சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவு என்பதால் மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசைக்கு ஆட்படுவதால் சந்திரனின் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு.

லகரி அயனாம்சத்தை அடிப்படையாக கொண்டு பின்பற்றப்படும் மற்றும் கணிதமுறைகளில் சில மாற்றங்களை திருத்தம் செய்து வெளியிடப்படும் பஞ்சாங்கம் திருத்தப்பட்ட கணிதம் அல்லது திருக்கணித பஞ்சாங்கம் ஆகும்.

பெரும்பாலான ஜோதிடர்களால் திருக்கணித பஞ்சாங்கமானது ஜாதகம் கணித்தல் மற்றும் ஜாதகப் பலன்கள் உரைக்க பயன்படுத்தப்படுகின்றது.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி வரும் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கம் :

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த ரிஷிகள் ஒன்றுக்கூடி தங்களுக்குள் இருக்கும் கருத்துக்களை பரிமாறி இயற்றிய ஸ்லோகங்களில் உள்ள கணிதமுறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்றளவும் எழுதப்படும் பஞ்சாங்கமாகும்.

காலமாற்றத்தினால் எவ்விதமான மாற்றத்திற்கும் உட்படாத, திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. நம் முன்னோர்களின் கருத்துக்களையும், அவர்கள் பின்பற்றிய கணிதமுறைகளையும் எள்ளளவும் மாற்றாமல் பழமையை பிரதிபலிக்கும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கம் ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள திருத்தலங்களில் இறை வழிபாடுகள் யாவும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பின்பற்றப்படுகின்றன.

நமது நித்ரா நாட்காட்டியின் முதல் பக்கத்தில் உள்ள நாட்காட்டி தகவல்கள் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, சனிப்பெயர்ச்சி வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sani peyarchi january or december


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->