தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை..காரணத்தை சொன்ன வனத்துறை!
Entry to Doddabetta view point banned The forest department told the reason
தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று ஒருநாள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்வந்து உதகையின் அழகை ரசித்து செல்கின்றனர்.
தற்போது உதகை வனப் பகுதியில் வறட்சி நிலவி வருவதால் விலங்குகள் உணவு தேடி குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் கூட்டமாக உலவுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மலை பகுதி வனத்தில் இருந்து நேற்று வெளியேறிய காட்டு யானைகள் தொட்டபெட்டா செல்லும் சாலையில் உலவியதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.தொடர்ந்து யானைகளின் கூட்டம் உணவு தேடி சாலைகளில் வருவதால் அங்குவரும் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துவருகின்றனர்.
தற்போது 40 பேர் கொண்ட வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று ஒருநாள் (06-05-2025) தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒற்றை காட்டுயானை தொடர்ந்து அப்பகுதியில் சுற்றி வருவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Entry to Doddabetta view point banned The forest department told the reason