விடுதலைப் போராட்ட வீரர் மோதிலால் நேரு பிறந்ததினம்!
Freedom fighter Motilal Nehru Birth Anniversary
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் திரு.மோதிலால் நேரு அவர்கள் பிறந்ததினம்!.
நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார்.
ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார்.
இவர் 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினை போதுதான் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார். எளிமையால் கவரப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால் நேரு தனது 69வது வயதில் 1931 பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Freedom fighter Motilal Nehru Birth Anniversary