மிக அசுத்தமான நகரம்: மிகப்பெரிய தலைகுனிவை மதுரை மக்களுக்கு தந்துவிட்டனர்... அதிமுக நிர்வாகி வேதனை! - Seithipunal
Seithipunal


அதிமுக மதுரை நிர்வாகி சரவணன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "இந்தியாவிலேயே தூய்மையான ஸ்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை முதலிடத்தில் எடுத்துச் சென்று, 2 முறை மத்திய அரசின் விருதை பெற்று, மதுரைக்கு புகழ் சேர்த்தவர் மாண்புமிகு #எடப்பாடியார்!

மத்திய அரசு Swachh Bharat Mission அமைப்பின் மூலம் நகர மற்றும் கிராமப்புற தூய்மையை அளவிட்டு ஆண்டுதோறும் ஆய்வறிக்கை வெளியிடும். குறிப்பாக நகர்ப்புற சுகாதாரம், பொது இடங்களில் சுகாதாரம், சுற்றுலா தலங்களில் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செயல் திறனை மதிப்பீடு செய்யும். இதில் முதலிடம்   பிடிக்கும் நகரங்களுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்கும்.

தற்போது மதுரையை எடுத்துக் கொண்டால் ஆண்டுதோறும் 2.74L  உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளும் வருகிறார்கள். குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் அம்மாவின் ஆட்சிக் காலத்திலும் சரி, எடப்பாடியார் ஆட்சிக் காலத்திலும்சரி மதுரை மாவட்டத்திற்கு ஏறத்தாழ 10,000 கோடிகளில் வளர்ச்சி திட்டங்களை செய்து வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்றார்கள். 

அம்மாவின் ஆட்சிக்காலத்தில் மதுரை மாநகராட்சி பல்வேறு விருதுகளை பெற்றது. அதேபோல் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தூய்மை கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு விருது வழங்கியது. அதேபோல திருப்பதிக்கு நிகராக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்கும் திட்டத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார். அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவிலே தூய்மையான நகரங்கள் பட்டியலில் மதுரை மாநகராட்சி 42வது இடத்தில் இருந்தது.

ஆனால், தற்போது மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் வளர்ச்சிகள் இல்லை. மதுரை பின்னோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இந்தியாவிலே அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை முதலிடத்தில் உள்ளது என்பது நமக்கு வேதனை தரும் செய்தியாகும். 

தற்போது தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர்,சூரத், அகமதாபாத், லக்னோ, ராயப்பூர் போன்ற மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன‌. அதேபோல் அசுத்தமான நகரங்கள் பட்டியலை எடுத்துக் கொண்டால், 4,823 புள்ளிகள் தரவரிசை கொண்டு மதுரை முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் லுதியான மற்றும் மூன்றாம் இடத்தில் சென்னை உள்ளது .

மதுரை மாநகராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 6000 கோடிக்கு மேல் பட்ஜெட் தாக்கல் செய்தும், மதுரை மாநகராட்சிக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் 250 கோடில் ஊழல் செய்து தமிழகத்தில் ஊழல் செய்வதில் மதுரை மாநகராட்சி தான் முதலிடத்தில் உள்ளது என்ற பெருமையை தட்டி சென்றுள்ளது .

எடப்பாடியார் ஆட்சி காலத்தில் பல்வேறு விருதுகள் பெற்று மதுரை மாவட்டத்திற்கு புகழ் சேர்த்தார். ஆனால் இன்றைக்கு ஸ்டாலின்  ஆட்சியில் உலக பிரசித்தி பெற்ற அன்னை மீனாட்சி அம்மன் குடி கொண்டிருக்கும் மதுரை இன்றைக்கு அசுத்தமான நகர பட்டியலில் சேர்க்கப்பட்டு மிகப்பெரிய தலைகுனிவை மதுரை மக்களுக்கு தந்துவிட்டனர். எதற்கெடுத்தாலும் தமிழகம் திராவிட மாடலாக உள்ளது. இந்த மாடலை அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகிறது என்று பெருமையாக தம்பட்டம் அடிக்கும் ஸ்டாலின், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இதுதான் திராவிடல் மாடல் ஆட்சியின் சாதனையா? 

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி மக்களும் ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட தயாராகி விட்டனர். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார், மதுரையை தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் கொண்டு வருவார்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Saravanan condemn to DMK MK Stalin govt


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->