ரகசிய கேமரா கும்பல் கையால் அதிர்ந்த ஓசூர்..! முக்கிய குற்றவாளி பீகாரில் பிடிபட்டனர்...! நடந்தது என்ன...?
Hosur shocked by secret camera gang main culprit caught Bihar What happened
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகிலுள்ள வன்னியபுரத்தில் செயல்படும் ஒரு தனியார் ஐபோன் உதிரிப்பாக உற்பத்தி நிறுவனத்தில் 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்காக உத்தனப்பள்ளி அருகே லாலிக்கல் கிராமத்தில் 11 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடி விடுதி கட்டப்பட்டுள்ளது.
அதில் தற்போது 9 கட்டிடங்கள் பயன்பாட்டில் இருந்து, ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் வீதம் சுமார் 6,250 பெண் ஊழியர்கள் தங்கியுள்ளனர்.இந்த அமைதியான சூழலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வகையில், 4வது பிளாக்கின் 8வது மாடியில் உள்ள குளியல் அறையில் ரகசிய கேமரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள் கடந்த 4-ந்தேதி மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அந்த கேமராவை நிறுவியவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.தொடர்ந்த விசாரணையில், கேமராவை வைக்கச் சொன்னது நீலுகுமாரியின் நண்பர் சந்தோஷ் என முதலில் கூறப்பட்டிருந்தாலும், பின்னர் அவர் கூறியவை பொய்யானவை என தெரியவந்தது.
உண்மையில் இந்தச் சதியின் பின்னணியில் இருந்தது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிபிரதாப் சிங் என்பவரே. தன்னை தேடி போலீசார் வருவதை அறிந்த அவர் பெங்களூருவிலிருந்து பீகாருக்கு தப்பி சென்றார்.இதையடுத்து தனிப்படை போலீசார் பீகாருக்குச் சென்று, அங்குள்ள மாநில போலீசாரின் உதவியுடன் ரவிபிரதாப் சிங்கை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
விரைவில் அவரை ஓசூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவுள்ளனர்.இதற்கிடையில், கடந்த மூன்று நாட்களாக பெண்கள் விடுதியில் தங்கி இருந்த பெண் ஊழியர்கள், “பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், ஒவ்வொரு அறையும் முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களின் கோரிக்கையை முன்னிட்டு, டெல்லியில் இருந்து 6 பேரும், பெங்களூருவிலிருந்து 4 பேரும் உட்பட 10 தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழு நேற்று ராயக்கோட்டைக்கு வந்து, விடுதியின் ஒவ்வொரு அறையிலும் மறைக்கப்பட்ட கேமரா அல்லது மைக்ரோ சாதனங்கள் உள்ளனவா என முழுமையான தொழில்நுட்ப சோதனையில் ஈடுபட்டது.
English Summary
Hosur shocked by secret camera gang main culprit caught Bihar What happened