காங்கிரஸ், பாடலின் வரலாற்று பங்களிப்பை நினைவு கூர்ந்தது...! பா.ஜ.க.–ஆர்.எஸ்.எஸ். மீது குற்றச்சாட்டு...!
Congress remembers songs historical contribution BJP RSS Accusations
வங்காளக் கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய “வந்தே மாதரம்” பாடல் 1875 நவம்பர் 7 அன்று ‘பங்கதர்ஷன்’ இதழில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. இந்த பாடல் இன்று 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவிலான கொண்டாட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவுநாணயத்தையும் வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில்,“‘வந்தே மாதரம்’ என்பது ஒரு பாடல் மட்டுமல்ல, நமது சுதந்திரத்தின் இதயத் துடிப்பு. பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் வரிகளில் தாய்நாட்டின் ஆன்மா உயிர் பெற்றது.
இந்தப் பாடல் இந்தியர்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேயர்களின் ‘பிரித்து ஆட்சி செய்’ கொள்கைக்கு எதிராக ஒற்றுமையின் முழக்கமாக மாறியது.”அவர் மேலும் குறிப்பிட்டதாவது,"1896-ல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூர் இதைப் பாடிய தருணம் சுதந்திரப் போராட்டத்தில் தீப்பொறியை ஏற்படுத்தியது.
லாலா லஜபத் ராய் பத்திரிகை தலைப்பில் இருந்து பிகாஜி காமாவின் கொடிவரை, ‘வந்தே மாதரம்’ எங்கும் ஒலித்தது. அதன் சக்தியால் அச்சமடைந்த ஆங்கிலேயர்கள் அதைத் தடை செய்தனர்".கார்கே கூறியதாவது, “காங்கிரஸ் ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘ஜன கண மன’ இரண்டையும் பெருமையுடன் பாடி வருகிறது.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. கூட்டங்கள் எதிலும் இந்தப் பாடல்களை பாடுவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் தங்கள் அமைப்பை போற்றும் ‘நமஸ்தே சதா வத்சலே’ பாடலையே பாடுகின்றனர்".இறுதியாக, அவர் வலியுறுத்தினார்,"1896 முதல் இன்று வரை ஒவ்வொரு காங்கிரஸ் கூட்டத்திலும் ‘வந்தே மாதரம்’ பாடப்படுகிறது. அது நமது தாய்நாட்டின் சின்னம், ஒற்றுமையின் அழைப்பு, இந்தியாவின் நிலையான ஆன்மாவின் குரல்".
English Summary
Congress remembers songs historical contribution BJP RSS Accusations