செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுக்கக் கூடாதா.? அது ஏன்.? - Seithipunal
Seithipunal


உதவி செய்வது என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதையே  விரும்புவார்கள். ஆனாலும் சில நேரங்களில் எந்த அத்தியாவசிய தேவை இருந்தாலும் எவ்வளவு உதவி செய்பவர்களாக இருந்தாலும் சில ஐதீக காரணங்களால் அதனைத் தவிர்க்கக் கூடிய சூழல் ஏற்படும். அப்படி ஒன்றுதான் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுக்காமல் இருப்பது. அதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுப்பதை பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள். அதற்கான காரணங்கள்  ஐதீகத்தின்படி  இருக்கின்றன.

ஐதீகத்தின் அடிப்படையில்  செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு உரிய நாட்களாகும். இந்த இரண்டு நாட்களிலும் நாம் வெளிப்படும் தெய்வங்கள் நமக்கு எல்லா செல்வங்களையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அந்த நாட்களில் செல்வங்கள் அனைத்தும் நம்மிடம் தான் இருக்க வேண்டும். அவை நம்மிடமிருந்து வெளியே சென்றாள் நிரந்தரமாக செல்வம் வீட்டிலிருந்து வெளியேறிவிடும் என்ற ஐதீகம் மக்களிடம் இருப்பதன் காரணமாகவே இந்த இரண்டு நாட்களிலும் பணம் கொடுப்பதை தவிர்த்து வருகிறார்கள்.

இரண்டு தினங்களிலும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வீட்டில் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாது என்ற ஐதீகமும் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த இரண்டு நாட்களிலும் பணம் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது.

நம் வீட்டில் செல்வங்கள் நிறைந்து வளம்  பெருக ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்ற வேண்டும். பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள்  படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும்.

லட்சுமி நம் வீட்டை விட்டு அகலாமலிருக்க பணம் கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது மற்றும் வாங்க கூடாது. வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியே வாசல் படியை தாண்டி கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளலாம். மேலும் இரவில் கூட்டிய குப்பைகளை வீட்டிலிருந்து வெளியே போடக்கூடாது. வீட்டில் ஏற்றப்பட்டிருக்கும் குத்து விளக்கு தானாக அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அவற்றை ஊதிய அணைக்காமல்  பூக்களை கொண்டு அணைக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reasons for Why we shudnt give money on Tuesdays and fridays


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->