புரட்டாசி மாத கலாச்சாரத்தை கண் முன் காட்டும் சங்கு சக்கரம்..! பெருமாள் நாம பட்டை..! - Seithipunal
Seithipunal


புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு ஏற்ற மாதம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று ஏராளமானோர் வழிபடுவார்கள். வீட்டிலும் பெருமாளையும், தாயாரையும் வழிபடுவார்கள்.

பெருமாள் என்றாலே நம் நினைவிற்கு வருவது சங்கும், சக்கரமும் தான். மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார்.

அகில உலகங்களையும் காத்து இரட்சிக்கும் பொறுப்பை ஏற்று நாளும் நமக்கெல்லாம் நல்வாழ்வு அளித்து கொண்டிருப்பவர் ஸ்ரீமந் நாராயணன். ஸ்ரீமந் நாராயணனின் பாதங்களை குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும்.

உவர் மண்ணானது நம் ஆடையினை எவ்வாறு தூய்மைப்படுத்துகிறதோ, அதேபோன்று இந்த திருநாமமும் தான் இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் என்பது ஐதீகம்.

பெருமாள் நாமம் ஒரு வீட்டில் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் திருப்பதி ஏழுமலையான் இருப்பதாக முன்னோர்களின் நம்பிக்கை.

நாம் தினந்தோறும் பெருமாள் நாமத்தை நம் மனதார ஜெபித்து வந்தால் திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் கிடைத்து செல்வ செழிப்பு உண்டாகும் என்பது வாக்கு.

இதேபோன்று பெருமாள் நாம பட்டையை வீட்டின் நிலைகாலில் பதிக்கும்போது திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் கிடைத்து கஷ்டங்கள் குறைய செய்து நிறைவான மகிழ்ச்சியை வழங்குவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Purattasi month special part 1


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->