புதுவை: கொட்டும் மழையிலும் பக்தர்கள் விநாயகர் தரிசனம்!
Puducherry manakula vinayagar temple festival
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொட்டும் மழையிலும் விநாயகரை தரிசித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில், புதுச்சேரியில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

மேலும், அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளுடன் தொடங்கியது. இதையடுத்து மூலவர் மற்றும் உற்சவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொட்டும் மழையிலும் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசித்தனர்.
இதனை அடுத்து, பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடும், பொதுமக்கள் தரிசனமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary
Puducherry manakula vinayagar temple festival