நவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்? கொலு வைக்க சிறந்த நேரம் எது? என்ன செய்யலாம்? முழுவிபரம் இதோ!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஆண்டு தோறும் நவராத்திரி பண்டிகை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் பக்தர்கள் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை செய்து வணங்குவார்கள். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை நாளை முதல் அதாவது 15.10.2023 முதல் 24.10.2023 வரை நடைபெற உள்ளது.

நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடைபெறும். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. 

நவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்?

இந்த உலகம் முழுவதிலும் ஆதிபராசக்தி அருளாட்சி செய்கிறாள். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.

முதல் படி - கீழ் படியில் - ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.

இரண்டாம் படி - இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.

மூன்றாம் படி - மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.

நான்காவது படி - நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.

ஐந்தாம் படி - ஐந்து அறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.

ஆறாம் படி - ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.

ஏழாம் படி -  சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.

எட்டாம் படி - தேவர்களகன் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.

ஒன்பதாம் படி - பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.

கொலு வைக்க சிறந்த நேரம் :

காலை நேரம் - 10.45 மணி முதல் 11.45 மணி வரை

மாலை நேரம் - 06.30 மணி முதல் 07.30 மணி வரை

முதல் நாள் வழிபாடு :

ஆதிபராசக்தி அம்மன் வடிவம் : மகேஸ்வரி 

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : மல்லிகைப்பூ மாலை

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : வில்வம்

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : சிவப்பு

அன்னையின் அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : சிவப்புநிற பூக்கள்

கோலம் : அரிசி மாவால் புள்ளி கோலம் போட வேண்டும்.

நைவேத்தியம் : வெண்பொங்கல்

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 2 வயது

பாட வேண்டிய ராகம் : தோடி

பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : மிருதங்கம்

குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சுண்டல்

பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும். மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுள் வாழ்வார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Navratri pooja best time and full details here


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->